ஈராக்கில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்: பயிற்சியின் போது நிகழ்ந்த துயரம்
ஈராக்கில் பயிற்சி ஈடுபட்டு இருந்த போது பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய வீரர் உயிரிழப்பு
பிரித்தானிய இராணுவத்தை சேர்ந்த வீரர் ஒருவர் ஈராக்கின் வடக்கு பகுதியில் நடைபெற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த துயர சம்பவமானது ஏற்பட்டு இருப்பதாகவும், உயிரிழந்த பிரித்தானிய வீரரின் குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வீரர் உயிரிழந்து விபத்து தொடர்பான விவரங்களை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆபரேஷன் ஷேடர் என்ற பெயரில் இஸ்லாமிய அரசு தலைதூக்குவதை தடுக்க மேற்கொள்ளப்படும் சர்வதேச இராணுவ கூட்டணி பணியின் ஒருபகுதியாக உயிரிழந்த பிரித்தானிய வீரர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வீரர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு துறை செயலாளர் ஜான் ஹீலி நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |