லண்டன் வெயில் தாங்காமல் வில்லியம் முன் பொத்துப்பொத்தென மயங்கி விழுந்த வீரர்கள்
லண்டன் எரியும் போது பிரித்தானிய வீரர்கள் இளவரசர் வில்லியமின் முன் மயங்கி விழுந்தனர்.
மயங்கி விழுந்த வீரர்கள்
லண்டனில் சனிக்கிழமையன்று வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின்போது மூன்று வீரர்கள் இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்தனர்.
சுமார் 30 டிகிரி செல்சியஸ் லண்டன் வெப்பத்தில் ராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
Adrian Dennis/AFP via Getty Images
மயக்கமடைந்த வீரர்களில் இராணுவ டிராம்போனிஸ்ட் ஒருவர் கீழே விழுந்துகிடந்த சில நிமிடங்களில் மீண்டும் எழுந்து தொடர்ந்து வாசிக்க தொடங்கிய சம்பவமும் ஒத்திகையின்போது நடந்தது. அவர் சுருண்டு விழுந்த சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்தனர் அனால் அவர் மீண்டும் வாசித்தார்.
? At least three British royal guards collapsed during a parade rehearsal in London ahead of King Charles' official birthday as temperatures exceeded 88 degrees Fahrenheit pic.twitter.com/V0fLjROoD5
— Reuters (@Reuters) June 10, 2023
நன்றி தெரிவித்த வில்லியம்
இளவரசர் வில்லியம் ஒரு ட்வீட்டில், "இன்று காலை கர்னல் மதிப்பாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றி. கடினமான சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் நன்றாக வேலை செய்தீர்கள்" என நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், "இது போன்ற ஒரு நிகழ்விற்கு குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் கொடுத்த கடின உழைப்பும் தயாரிப்பும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெருமை சேரும்" என்று எழுதினார்.
Conducting the Colonel's Review of the King's Birthday Parade today. The hard work and preparation that goes into an event like this is a credit to all involved, especially in today’s conditions. pic.twitter.com/IRuFjqyoeD
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 10, 2023
லண்டன் வெயில்
சனிக்கிழமை லண்டனில் வெப்பநிலை 30 C (86 F) ஆக இருந்தது.
UK Health Security Agency தெற்கு இங்கிலாந்தில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை எச்சரிக்கையை வெளியிட்டிருந்த போதிலும் ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகை நடந்தது.
AFP
ட்ரூப்பிங் தி கலர் என்பது பிரித்தானிய மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர இராணுவ அணிவகுப்பு ஆகும். ஜூன் 17-ஆம் திகதி நடைபெறும் விழாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் மேற்பார்வையிடுவார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Join Now