டேட்டிங் செயலியால் தகவல்களை கோட்டைவிட்ட ரஷ்ய ராணுவம்: பிரித்தானிய உளவுத்துறை பரபரப்பு தகவல்!
உக்ரைனுக்கு புகுந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்களின் நகர்வுகளை grinder டேட்டிங் செயலி மற்றும் அவர்களின் பிற சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் பிரித்தானிய உளவாளிகள் கண்காணித்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்ய போர் தொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என அந்த நாட்டின் ஜனாதிபதி புதின் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் புதினின் அறிவிப்பை மறுத்து, உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் தனது போரை தொடங்கும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வந்தனர்.
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்ததை போலவே, ரஷ்யா-உக்ரைன் மீதான தனது போரை தொடங்கி 11 நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் ரஷ்ய ராணுவ வீரர்களின் முன்னகர்வு மற்றும் அடுத்தகட்ட திட்டங்களை grinder டேட்டிங் செயலி மற்றும் அவர்களது சமூகவலைத்தள பக்கங்களின் குறுந்செய்திகள் மூலம் பிரித்தானிய உளவாளிகள் உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த உளவு தகவல்கள் மூலமே ரஷ்யாவின் படையெடுப்பை ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளின் தலைவர்களால் உறுதியாக எச்சரிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உளவு தகவல்களை பிரித்தானிய உளவுத்துறை உக்ரைனுக்கு முன்னரே தெரிவித்ததன் விளைவாக ரஷ்யாவின் முழு அளவிலான தாக்குதலை முன்னெச்சரிக்கையுடன் எதிர்பார்த்து உக்ரைனியர்கள் சமளித்ததாகவும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டே grinder டேட்டிங் செயலி போன்றவற்றை ரஷ்ய ஜனாதிபதி புதின் தடைசெய்திருந்த போதிலும் இன்னும் உபயோகத்தில் இருக்கும் grinder மற்றும் பிற சமூக வலைதளங்களை ரஷ்ய ராணுவ வீரர்களை இன்னமும் பயன்படுத்துவதால், இத்தகைய செயலிகள் அவர்களை கணிக்கணிக்கும் புதையலாக பிரித்தானிய உளவு அதிகாரிகளுக்கு விளங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.