உளவாளி என கைதான பிரித்தானிய மாணவர்... அமீரக சிறையில் அனுபவித்த கொடும் சித்திரவதை: அதிர்ச்சி சம்பவம்
பாதுகாப்புதுறை தொடர்பில் ஆய்வுக்கு என அமீரகம் சென்றுள்ள பிரித்தானிய மாணவர் உளவாளி என கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
பிரித்தானிய உளவாளி
மட்டுமின்றி, இவரது மருத்துவ தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை பதிவு செய்து நாடு முழுவதும் பரப்பியதாகவும் இவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 35 வயதான மேத்யூ ஹெட்ஜஸ் என்பவர் பிரித்தானிய உளவாளி என கருதி 2018 மே மாதம் துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த மேத்யூ ஹெட்ஜஸ் அமீரக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்றிருந்தார். ஆனால் இவரது மனைவி மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் தொடர் போராட்டங்களுக்கு பின்னர் 2018 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
தம்மை அவர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதாக அவர் அப்போது கூறியிருந்தாலும், மேத்யூ ஹெட்ஜஸ் விடுவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அமீரகத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளது.
@dailymail
அதிலேயே மேத்யூ ஹெட்ஜஸ் அமீரக சிறையில் அனுபவித்த கொடூர சித்திரவதை தொடர்பில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டாயப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதும், தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும், தூங்கவிடாமல் தொல்லை செய்ததும், ஜன்னல்கள் இல்லாத அவரது சிறை அறையில் 24 மணி நேரமும் பல மாதங்கள் விளக்கை எரியவிட்டதும் அம்பலமானது.
அமீரக சிறையில் கொடூர சித்திரவதை
தமது ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், லண்டன் புறப்பட துபாய் விமான நிலையம் சென்றவரை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர் பிரித்தானிய உளவாளி என குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தனர்.
@rolandHoskins
ஜன்னல் இல்லாத அறையில் சிறை வைக்கப்பட்டதுடன், முதல் சில மாதங்கள் தரையிலேயே படுக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி, சிறை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள மருந்துகளை கட்டாயப்படுத்தி உட்கொள்ள வைத்ததாகவும், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, தொடர் விசாரணைக்கும் உட்படுத்தியதாக ஹெட்ஜஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்யாத குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும், ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஹெட்ஜஸ் தெரிவித்துள்ளார்.