பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு
British student lola-fleur calls for uk youth riot:பிரித்தானிய மாணவி இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிஸ் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களை கேலி செய்த பிரித்தானிய மாணவி, கிளர்ச்சி செய்ய இங்கிலாந்து இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லோலா-ஃப்ளூர் விட்டேக்கர்
பிரித்தானிய-பிரெஞ்சு மாணவியான லோலா-ஃப்ளூர் விட்டேக்கர் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவர் தற்போது, பிரான்ஸ் போராட்டத்தில் பங்கேற்ற இயக்கத்தின் மிகவும் அறியப்பட்ட முகங்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
தனது தாய் குறித்த பதிவுகளால் விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளான லோலா, போராட்ட இயக்கத்தை ஆதரிக்க சமூக ஊடங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அவற்றில் குறிப்பாக, பாரிஸ் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களை கேலி செய்து பிரான்ஸில் சீற்றத்தை உண்டாக்கினார்.
இந்த நிலையில், பிரான்சில் உள்ளவர்களைப் போலவே பிரித்தானிய இளைஞர்களும் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, பிரான்சில் நடைபெற்று வரும் இந்த இயக்கத்தைப் பின்பற்றுமாறு பிரித்தானிய இளைஞர்களை லோலா-ஃப்ளூர் விட்டேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
10 பில்லியன் யூரோக்கள்
பிரான்சின் தீவிர இடதுசாரி கட்சியான France Unbowed-யின் முக்கிய ஆதரவாளரான லோலா-ஃப்ளூர் விட்டேக்கர், கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 10 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்.
அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களில் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், The Times நாளிதழிடம் பேசிய லோலா-ஃப்ளூர் விட்டேக்கர், கடைகளில் கொள்ளையடித்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சில, தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
