தாயாரின் அந்த முடிவு... 6 ஆண்டுகள் மாயமான பிரித்தானிய இளைஞன் அளித்த வாக்குமூலம்
சுமார் 6 ஆண்டுகள் மாயமான நிலையில், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர், தாயாரின் அந்த முடிவு தான், அவரை விட்டு வெளியேற காரணம் என அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
Alex Batty ஒப்படைக்கப்படுவார்
தாயார் மற்றும் தாத்தாவுடன் தொடர்ந்து இடம் மாறி வந்ததாக கூறும் Alex Batty, தமது அந்த பிரித்தானிய வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றார். தெற்கு பிரான்சில் வியாழக்கிழமை ஒரு வாகன சாரதியால் Alex Batty மீட்கப்பட்டார்.
Credit: GMP
தற்போது ஞாயிற்றுக்கிழமைக்குள் பிரித்தானியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் Alex Batty ஒப்படைக்கப்படுவார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் Alex Batty-ன் தாயார் தற்போது எங்கே வசிக்கிறார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தாயார் தொடர்பில் அந்த இளைஞரிடத்திலும் முறையான தகவல் இல்லை. அவர்கள் மொராக்கோவில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் Alex Batty-ன் தாத்தா மரணமடைந்துள்ளார்.
இதனிடையே, அலெக்ஸின் பாட்டி சூசன் கருவானா தெரிவிக்கையில், அலெக்ஸ் மீட்கப்பட்ட தகவல் அறிந்து நிம்மதி அடைந்ததாகவும், பத்திரமாகவும் எந்த சிக்கலும் இன்றி கண்டுபிடிக்கப்பட்டது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிகாரிகளிடம் Alex Batty தெரிவிக்கையில், 2017 வரையில் 10 பேர்கள் கொண்ட ஒரு அமைப்புடன் தாங்கள் மூவரும் தொடர்ந்து இடம் மாறி வந்ததாக தெரிவித்துள்ளார்.
தாயார் முடிவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அந்த 10 பேர் கொண்ட குழு மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றும், ஆனால் தமது தாயார் எடுத்த முடிவு தான், குடும்பத்தினரை விட்டு பிரிய காரணம் என்றும் Alex Batty குறிப்பிட்டுள்ளார்.
@@GMP
பின்லாந்தில் குடியேற தாயார் முடிவு செய்துள்ளது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதனாலையே தாயார் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கிருந்து 4 பகல் மற்றும் 4 இரவுகள் தொடர்ந்து நடந்துள்ளார் பெரும்பாலும் இரவு நேரம் நடக்கவும், பகலில் தூங்கவும் செய்துள்ளார். உணவுக்கு பழங்கள் சாப்பிட்டுள்ளார்.
இறுதியில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பேஸ்புக் ஊடாக தமது பாட்டியை தொடர்புகொண்ட அலெக்ஸ், தமக்கு பிரித்தானியா திரும்ப ஆசையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் சமீபத்தில் காளொளி அழைப்பில் பேசிக்கொண்டுள்ளனர். கடந்த 2017 செப்டம்பர் 30ம் திகதி கிரேட்டர் மான்செஸ்டரில் இருந்து மெலனி மற்றும் டேவிட் பாட்டி ஆகியோர் ஸ்பெயினில் உள்ள மார்பெல்லாவிற்கு ஒரு வார விடுமுறைக்காக அலெக்ஸுடன் சென்றுள்ளனர்.
ஆனால் அக்டோபர் 8ம் திகதி பிரித்தானியாவுக்கு திரும்ப முடிவு செய்த நிலையில், அவர்களிடம் இருந்து Alex Batty மாயமானதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |