சுற்றுலா சென்ற நாட்டில் ஒன்றரை வயது பிரித்தானிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்
ஸ்பெயின் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஒன்றரை வயது பிரித்தானிய குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஸ்பெயினில் Alicante நகரத்தில் La Nucia பகுதியில் உள்ள விடுமுறைக்காக சொகுசு பங்களாவில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடந்துள்ளது.
குழந்தை நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவசர சிகிச்சைப் பணியாளர்கள் காப்பாற்ற முயற்சித்த போதிலும், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது, ஆனால் குழந்தையை உயிர்ப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
Credit: Solarpix
இது விபத்தா அல்லது இந்த சம்பவத்தில் ஏதேனும் சந்தேகிக்கும்படியான நடவடிக்கை உள்ளதா என்பது குறித்து ஸ்பெயின் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
குழந்தையின் குடும்பம் பிரித்தானியர்கள் என்றும், அந்தச் சமயத்தில் குழந்தையின் தாயார் மற்ற மூன்று பிள்ளைகளுடன் அதே பங்களாவில் தான் இருந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன.
Credit: Solarpix
கடந்த ஆண்டும் இதே நேரத்தில் கோஸ்டா பிளாங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் மற்றொரு பிரித்தானிய குழந்தை நீரில் மூழ்கி இறந்தது.
கடந்த ஆண்டு மே 25 அன்று பெனிடார்முக்கு அருகிலுள்ள ஏய்குஸ் கிராமத்தில், ஃப்ரெடி ஜோசப் பிரிக்ஸ் எனும் 19 மாத குழந்தை வீட்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது.