மெத்தனால் விஷத்தால் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலா பயணி: 28 வயது இளம்பெண் உயிரிழப்பு
பிரித்தானிய சுற்றுலா பயணி லாவோஸ் நாட்டில் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
விஷமான மதுபானம்
லாவோஸ் நாட்டின் வாங் வியெங்(Vang Vieng) நகரில் உள்ள உள்ளூர் மதுபான கடையில் வழங்கப்பட்ட இலவச மது பானத்தை குடித்த சுற்றுலா பயணிகள் பலர் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.
6 பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரான ஆர்பிங்டன் பகுதியை சேர்ந்த பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி சிமோன் ஒயிட் (Simone White, 28) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்னதாக ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்த பியான்கா ஜோன்ஸ்(Bianca Jones, 19) 20 வயது மதிக்கத்தக்க 2 டேனிஷ் பெண்கள் மற்றும் 56 வயது அமெரிக்க பெண் ஆகிய 4 பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
உள்ளூர் அதிகாரிகளின் தகவல் படி, லாவோஸ் நாட்டில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |