பிரித்தானிய பெண் பயணிக்கு டெல்லியில் நடந்த துயரம்: இன்ஸ்டாகிராம் நண்பரால் காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் பயணியை டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டு வந்த பிரித்தானிய பெண் பயணி ஒருவர், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் டெல்லி மஹிபால்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி
பிரித்தானியாவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி இந்தியாவில் விடுமுறையை கழிக்க வந்துள்ளார்.
ஆரம்பத்தில் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கைலாஷ் என்ற நபரை தொடர்பு கொண்டு தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த கைலாஷ், அவரை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதையடுத்து டெல்லிக்கு வந்த பிரித்தானிய பெண் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அப்போது ஹோட்டலுக்கு தனது நண்பருடன் வந்த கைலாஷ் பிரித்தானிய சுற்றுலா பயணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
புகாரின் அடிப்படையில், கைலாஷ் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது நண்பர் வாசிம் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானிய தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டு பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் கைலாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |