இது தாஜ்மஹாலா? சொர்க்கமா? வைரலாகும் பிரித்தானிய பெண்ணின் வீடியோ
இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த பிரித்தானிய பெண் வெளியிட்ட தாஜ்மஹால் வீடியோ வைரலாகியுள்ளது.
கிறிஸ்டா ஜார்மன்
பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ்டா ஜார்மன் (Krista Jarman) என்ற இளம்பெண் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப்பார்ப்பது அவரது விருப்பமாக இருந்துள்ளது.
எனவே ஆக்ரா நகருக்கு சென்ற அவர், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை தனி ஆளாக காண வேண்டும் என நினைத்துள்ளார்.
வைரலான வீடியோ
அதற்காக அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தனியாக அங்கு சென்றுள்ளார். தாஜ்மஹாலைச் சுற்றித் திரிந்த மயில், பறவைகளை தனியாக கண்டு களித்த கிறிஸ்டா, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதனை வெளியிட, லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்று வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவுக்கு வரும் கருத்துக்களில் இது தாஜ்மஹாலா அல்லது சொர்க்கமா? என்றெல்லாம் வியந்து பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |