பிரித்தானிய வர்த்தகச் செயலர் சுவிட்சர்லாந்து பயணம்: முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை
பிரித்தானிய வர்த்தகச் செயலர் சுவிட்சர்லாந்துக்கு பயணமாகச் சென்றுள்ளார். அதன் பின்னணியில் வர்த்தகம் தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளன.
பிரித்தானிய வர்த்தகச் செயலர் சுவிட்சர்லாந்து பயணம்
பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனோக் (Kemi Badenoch) நேற்று சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்.
சுவிட்சர்லாந்து, பிரித்தானியாவின் 10ஆவது பெரிய வர்த்தக் கூட்டாளி நாடாகும்.
பயணத்தின் நோக்கம்
பிரித்தானியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தமானது, 50 ஆண்டுகளுக்கு முந்தைய, ஐரோப்பிய ஒன்றிய - சுவிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதாகும். அது, வீடுகளில் கணினிகளோ, இணையமோ பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.
ஆக, கெமி சுவிட்சர்லாந்து பயணித்துள்ளதன் நோக்கம், புதிய, நவீனமயமாக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகும்.
கெமி, சுவுஸ் பெடரல் கவுன்சிலரான Guy Parmelinஉடன், Bernஇல் இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க இருக்கிறார்.
UK to launch talks with Switzerland on new trade deal https://t.co/pvf5TejBPz
— Conservative Post (@ConsPost) May 15, 2023