ஜோ பைடனை தொடர்ந்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் இப்போது நாடு திரும்புகின்றன என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஹவுஸ் ஆப் காமன்ஸில் உரையாற்றிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு அறிவித்தார்.
தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போர் காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ சர்வதேச நாடுகளின் கூட்டுப்படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், செப்டம்பர் 11ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிடும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோவின் கடைசி படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானத்தளத்தை விட்டு வெளியேறின.
ஆனால், தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியதின் மூலம் அமெரிக்க தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாக ரஷ்யா விமர்சித்தது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் நேட்டோ நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா படையின் பங்களிப்பு முடிவுக்கு வருதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு படைகள் வெளியேறுவதால் ஆப்கானிஸ்தானில் மோசமான உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்று இங்கிலாந்து இராணுவத் தலைவர் நிக் கார்ட்டர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.