பேருந்து ரயில்களில் சீண்டப்படும் பெண்கள்: வெளிநாடொன்றிற்கு பிரித்தானிய பல்கலை செய்துள்ள உதவி
பாகிஸ்தானில், பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, பெண்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்களாம்.
இப்படி தொடர்ந்து சீண்டல்களுக்கு ஆளாவதால், பல இளம்பெண்கள் தங்கள் படிப்பையே இடையில் நிறுத்திவிடுகிறார்களாம்.
பிரித்தானிய பல்கலை செய்துள்ள சிறு உதவி
அப்படி பாதிப்புக்குள்ளாகும் மாணவிகளுக்காக, பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டிலுள்ள Aberystwyth பல்கலைக்கழகம், சிறு உதவி ஒன்றைச் செய்துள்ளது.
நான்கு மாணவிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நிதியுதவி செய்துள்ளது அந்த பல்கலைக்கழகம்.
பல்கலையின் உதவியால் மோட்டார் சைக்கிள் பெற்ற மாணவிகளில் ஒருவரான Noor-ul-Hada கூறும்போது, தனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், இனி எந்த தொந்தரவுமின்றி தன்னால் சுதந்திரமாக பயணிக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |