பிரான்சுக்கே சென்று புலம்பெயர்வோர் படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்
பிரித்தானிய உள்துறைச் செயலர் ஒருபக்கம் அதிரடி புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பிரித்தானியர்கள் சிலர் நேரடியாக பிரான்சுக்கே சென்று, அங்கிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்கப் பயன்படுத்தும் படகுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளார்கள்.
படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்
பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, புதிய, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏறமுயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

விடயம் என்னவென்றால், Raise the Colours அமைப்பைச் சேர்ந்த பிரித்தானியர்கள் பிரான்ஸ் கடற்கரைகளில் புலம்பெயர்வோரைத் தடுக்க முயலும்போது, அங்கு பிரான்ஸ் நாட்டு பொலிசார் ஒருவர் கூட இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |