உக்ரைனில் இரண்டு பிரித்தானிய வீரர்கள் கொலை? வெளியான பரபரப்பு தகவல்
உக்ரைனுக்கு தன்னார்வலர்களாக சண்டையிட சென்ற இரண்டு பிரித்தானிய வீரர்கள், சக வெளிநாட்டு படை வீரர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என பரபரப்பு செய்தி பரவி வருகிறது.
உக்ரைனுக்காக சென்ற வீரர்கள்
கடந்த ஆண்டு தன்னார்வத்துடன் உக்ரைனில் சண்டையிட சென்றவர் முன்னாள் Paratrooper வீரர் டேனியல் பர்க் (36).
இவர் ஆகத்து 11ஆம் திகதி அன்று தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து காணாமல் போனார்.
இதுவரை அவரது விவரம் வெளியாகாத நிலையில், தன் சக வெளிநாட்டு படை போராளிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், அவர் நன்கொடையாக பெறும் பணத்தின் மீதான புகார்கள் மற்றும் பொறாமை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விசாரணை நடத்தும் உக்ரேனிய பொலிஸார்
அதேபோல் பாக்முட் அருகே முன்னாள் பிரித்தானிய வீரரான ஜோர்டான் சாட்விக்கின் (31) மரணம் குறித்த விசாரணையில் உக்ரேனிய காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Lancashireயின் Burnleyயைச் சேர்ந்த முன்னாள் ஸ்கொட்லாந்து காவலரான சாட்விக், உக்ரைனுக்காக போராட வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சூன் மாதத்தில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நீர்நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் ஒரு சிறிய வாக்குவாதத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என டெய்லி டெலிகிராப் கூறியது அவரது மரணத்தில் மேலும் மர்மத்தை எழுப்பியது.
சக வெளிநாட்டு போராளிகளால் கொலை?
இவர்கள் இவரின் வழக்குகளும் இணைக்கப்பட்டதாக கருதப்படவில்லை என்றாலும், சக வெளிநாட்டுத் போராளிகளால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் சக தோழர்களிடையே எழுந்துள்ளது.
பிரித்தானிய இராணுவத்துடன் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பர்க், கடந்த ஆண்டு தன்னார்வ வீரராக உக்ரைனுக்கு சென்றிருந்தார். அவர் சக போராளிகளிடம் அமெரிக்க மில்லியனர்களிடம் இருந்து மாதத்திற்கு 8,000 பவுண்டுகளை நன்கொடையாகப் பெறுவதாக கூறியிருந்தார். மேலும் இது துருப்புகளிடையே பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த நிலையில் பர்க் மற்றும் சாட்விக் வழக்குகள் தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் விசாரணை முறைகள் குறித்து, பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |