வெளிநாட்டில் 30வது பிறந்தநாளை கொண்டாடிய பிரித்தானிய பெண்: நேர்ந்த துயர சம்பவம்
British woman fell down in greece hotel balcony: பிறந்தநாளை கொண்டாட கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரித்தானியப் பெண் விபத்திற்குள்ளாகி தவித்து வருகிறார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 30 வயது பெண்ணொருவர், கிரீஸ் நாட்டில் பால்கனியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார்.
பிறந்தநாளைக் கொண்டாட
பிரித்தானியாவைச் சேர்ந்த டென்பி மெக்லாரென், தனது பிறந்தநாளைக் கொண்டாட கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
ரோட்ஸில் ஹொட்டல் ஒன்றில் தனது தாயுடன் டென்பி தங்கியிருக்கிறார். அங்கு தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது டென்பி பால்கனியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் அவருக்கு முதுகுத்தண்டு உடைந்துள்ளது. மேலும் காலில் உள்ள பல எலும்புகளும் உடைந்ததாக தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்பி தற்போது 10,000 பவுண்டுகள் மருத்துவக் கட்டணத்துடன் தவித்து வருகிறார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள அவரது உறவினர்கள் டென்பியை South Lanarkshire-லுக்கு திரும்ப அழைத்து வர தீவிர முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், டென்பியின் பார்ட்னரான கிரேக் ஆண்டர்சன், அவரது மருத்துவக் கட்டணங்களை செலுத்தவும், அவரை கிரீஸில் இருந்து விமானத்தில் அழைத்து வரவும் ஒரு நிதி திரட்டலைத் தொடங்கியுள்ளார்.