ஒரே வீட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பிரித்தானிய பெண்மணி: சுவாரசிய பின்னணி

By Arbin Jul 08, 2022 01:40 PM GMT
Report

காலகட்டத்திற்கு ஏற்ப தங்களையும் வசதி வாய்ப்பையும் மாற்றிக்கொள்ளும் மக்கள் மத்தியில், பெண்மணி ஒருவர் 104 ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பிரித்தானிய பெண்மணியான எல்சி ஆல்காக் தாம் பிறந்த வீட்டிலேயே இன்றளவும் குடியிருந்து வருகிறார். 1918ல் பிறந்த அவர், இதுவரை 2 உலகப்போரையும், பிரித்தானிய மன்னர்கள் நால்வர், ராணியார், பிரதமர்கள் 25 பேர்கர் என பார்த்துள்ளார்.

குறித்த பெண்மணி ஹுத்வைட்டில் உள்ள பார்கர் தெருவில் ஒரு மாடி வீட்டில் வசித்து வருகிறார். அவரது தந்தை 1902 ம் ஆண்டில் ஏழு வெள்ளி மற்றும் ஆறு பென்ஸ், சுமார் 30 பவுண்டுக்கு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

ஒரே வீட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பிரித்தானிய பெண்மணி: சுவாரசிய பின்னணி | British Woman Has Lived In The Same House

ஐந்து குழந்தைகளில் இளையவரான எல்சி 1941 ல் இரண்டாம் உலகப் போரின் போது திருமணம் செய்து கொண்டு தனது கணவர் பில் உடன் இந்த குடியிருப்பில் வசிக்கத் தொடங்கியுள்ளார்.

தாயார் இறந்த பின்னர் தமது தந்தையை கவனிக்கும் பொறுப்பு தமக்கு அமைந்ததால், தந்தை மற்றும் கணவருடன் இந்த வீட்டில் குடியிருக்க தொடங்கியதாக எல்சி தெரிவித்துள்ளார்.

1949ல் தந்தை மரணமடைய, இறுதியில் 1960ல் அந்த வீட்டையே சொந்தமாக வாங்கியதாக எல்சி தெரிவித்துள்ளார். வங்கியில் இருந்து கடன்வாங்கி சுமார் 250 பவுண்டுகளுக்கு அந்த வீட்டை எல்சி வாங்கியுள்ளார்.

ஒரே வீட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பிரித்தானிய பெண்மணி: சுவாரசிய பின்னணி | British Woman Has Lived In The Same House

தற்போது வீடு மற்றும் மற்றும் நிலத்தின் மதிப்பு மட்டும் 75,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது. இந்த வீட்டை விட்டு வேறு எங்கும் சென்று வசிக்கும் நிலை ஏற்படவில்லை எனவும், இந்த வீடு தமக்கு எல்லாமுமாக அமைந்து போனது என்கிறார் எல்சி.

அவரது 75 வயது மகன் உட்பட அனைவரும் அதையே தற்போது கூறுகின்றனர். 104 வயது எல்சி இறுதி மூச்சுவரையில் இந்த வீட்டிலேயே குடியிருக்கவும் ஆசைப்படுகிறார். 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US