புதிய வாழ்வைத் துவங்க பிரான்சுக்கு சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
புதிய வாழ்வைத் துவக்கலாம் என்ற கனவுடன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரித்தானியப் பெண்ணொருவர் அவரது முன்னாள் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதிய வாழ்வைத் துவங்க பிரான்சுக்கு சென்ற பிரித்தானிய பெண்
பிரித்தானியரான ஆலிசன் எர்ப் (Alison Erb, 49) என்னும் பெண், பிரான்சிலுள்ள Roppentzwiller என்னுமிடத்தில் தனது காதலரான லொரெட்டோ டி சால்வடாருடன் (Loreto Di Salvatore) அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
புதிய வாழ்வைத் துவங்குவதற்காக பிரான்சுக்கு சென்ற ஆலிசன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஆலிசன் தனது கணவரான ஆலிவர் எர்பை (Olivier Erb) பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்யும் நடைமுறைகளைத் துவக்கி இருந்தனர்.
இந்நிலையில்தான் ஆலிசனும் அவரது காதலரும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
2023ஆம் ஆண்டு நடந்த இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் தொடர்பாக ஆலிசனின் முன்னாள் கணவரான ஆலிவர் கைது செய்யப்பட்டாலும், அவருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் கணவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக, எட்டு அதிகாரிகள், 150 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.
இதற்கிடையில் ஆலிசன் வீட்டிலிருந்த CCTV காட்சிகள் கிடைக்க, தற்போது ஆலிவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னைப் பிரிந்து வேறொரு ஆணூடன் வாழ்வைத் துவங்க திட்டமிட்டிருந்த தன் முன்னாள் மனைவியின் கண் முன்னே அவரது காதலரைக் கொலை செய்த ஆலிவர், அதன் பின் ஆலிசனையும் கொலை செய்ததாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.
தன் முன்னாள் மனைவியையும் அவரது காதலரையும் கொலை செய்த ஆலிவர், ஒரு பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.