உக்ரைனிய அகதிப்பெண்ணால் வாழ்விழந்த பிரித்தானிய பெண் முதன் முறையாக மௌனம் கலைக்கிறார்
உக்ரைன் அழகிக்காக தன் மனைவியைக் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர்.
அவர் உக்ரைனியர்களுக்கு உதவ இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தன் சொந்தப் பிள்ளைகளை கவனித்துகொள்ள முடியாதவர் உக்ரைன் பிள்ளைகளுக்கு உதவப்போகிறாராம் என்கிறார், உக்ரைன் அழகிக்காக தன் கணவரால் கைவிடப்பட்ட பிரித்தானிய பெண்.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு அகதியாக ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna) தம்பதி அவருக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொண்டது. மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார் டோனி.
Credit: NB PRESS LTD
சமீபத்தில் டோனி தானும் சோபியாவும் உக்ரைனுக்குச் சென்று உக்ரைன் மக்களைக் காப்பாற்ற இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டோனியால் கைவிடப்பட்ட அவரது மனைவியான லோர்னா, தன் சொந்தப் பிள்ளைகளை கவனித்துகொள்ள முடியாதவர் உக்ரைன் பிள்ளைகளுக்கு உதவப்போகிறாராம் என டோனியை விமர்சித்துள்ளார்.
உக்ரைன் அகதியுடன் ஓடிப்போன டோனி, உக்ரைனிலுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்காக நிதி திரட்டப்போகிறாராம். மூன்று மாதங்களாக அவர் தன் சொந்தப் பிள்ளைகளை பார்க்கவில்லை. அவர் இப்போது உக்ரைனுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவப் போவதாகக் கூறுவதைக் கேட்டால் வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் லோர்னா.
முதலில் அவர் தன் சொந்தப் பிள்ளைகளை கவனிக்கட்டும், தன் குடும்பத்துக்கு உதவாமல், தான் உக்ரைனிலிருப்பவர்களுக்கு உதவப்போவதாக டோனி கூறுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது என்கிறார் லோர்னா.
Credit: LNP