கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில்..பிரித்தானிய பெண் உயிரிழப்பு
British woman killed in parasailing accident: ஸ்பெயினில் பாராசெய்லிங் விபத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.
ஸ்பெயின் நாட்டில் பிரித்தானியப் பெண்ணொருவர், பாராசெய்லிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார்.
பிரித்தானியப் பெண்
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் ஸ்பெயினின் பெனிடார்ம் பகுதிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளார்.
அவர் பாராசெய்லிங் சாகசத்தில் ஈடுபட பலத்த காற்று வீசியுள்ளது. இதில் அவரது பாராசூட்டை இழுத்துச் செல்லும் படகை இணைத்திருந்த கயிறு அறுந்துபோனது. இதனால் குறித்த பிரித்தானியப் பெண் பாறைகள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட, உடனடியாக அவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே சமயம் அவரது கணவர் என்று கூறப்படும் நபர், விலா எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், காயமடைந்த நிலையிலும் அவரால் நடக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |