ராணுவ வீரரின் ஆவியை திருமணம் செய்த பிரித்தானிய பெண்: ஒரே ஆண்டில் ஏற்பட்டுள்ள சோகம்
நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம்
மேற்கத்திய நாடுகளில், மரத்தை திருமணம் செய்பவர்கள், தன்னைத்தான் திருமணம் செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.
அவ்வகையில், பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde (40) என்பவர், நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.
லண்டனில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு, பிரபல நடிகை மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
ஒரே ஆண்டுக்குள் முடிவுக்கு வந்த திருமணம்
இந்நிலையில், Edwardoவுடனான தனது திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் Brocarde. அவரது கணவரான Edwardoவுக்கு நடிகை மர்லின் மன்றோ என்றால் உயிராம். மர்லின் மன்றோவின் ஆவி தங்கள் திருமணத்தில் பங்கேற்ற நாள் முதல் அவர் மீது பைத்தியமாகிவிட்டாராம் Edwardo.
அடிக்கடி மாயமாகிவிடும் Edwardo, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பினால், அவரிடம் Chanel No.5 என்னும் வாசனை திரவியத்தின் வாசம் வீசுமாம். Chanel No.5 என்பது, மர்லின் மன்றோ விரும்பி பயன்படுத்தும் வாசனை திரவியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குழந்தை ஒன்றின் அழுகுரல் மூலமாகவும் Edwardo தன்னை தொந்தரவு செய்யத் துவங்கிட்டதாகவும் தெரிவித்துள்ள Brocarde, தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட அதே ஆலயத்தில் சென்று தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |