இலங்கையில் 30 பேர் உயிரிழந்த கலவரம்: பிரித்தானிய விமானப் பணிப்பெண் சிறை மாற்றம்
British air stewardess moved another sri lankan prison: செயற்கை கஞ்சா கடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரித்தானியப் பெண் இலங்கையில் சிறை மாற்றப்பட்டுள்ளார்.
பிரித்தானிய விமானப் பணிப்பெண்ணொருவர், இலங்கையில் 30 பேர் உயிரிழக்கக் காரணமான கலவரத்தைத் தொடர்ந்து சிறை மாற்றப்பட்டுள்ளார்.
செயற்கை கஞ்சாவைக் கடத்த முயன்றதாக
இலங்கைக்குள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள செயற்கை கஞ்சாவைக் கடத்த முயன்றதாக, பிரித்தானிய விமானப் பணிப்பெண் சார்லோட் மே லீ (22) குற்றம்சாட்டப்பட்டார்.
சுமார் 18 மாதங்களாக சிறையில் உள்ள சார்லோட் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர் மீது இன்னும் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
எனினும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சார்லோட்டிற்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
வேறு சிறைக்கு
இந்த நிலையில், நீர்கொழும்பு (Negombo) சிறையில் இருந்து சார்லோட் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு காரணம், சமீபத்தில் அங்கு ஏற்பட்ட கொடிய கலவரத்தில் காவலர்கள் உட்பட 30 உயிரிழந்ததுதான்; பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சார்லோட் அருகில் உள்ள குளியாப்பிட்டிய (Kuliyappitiya) சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அங்கு அவர் நன்றாக சமாளித்து வருகிறார் என்று உள்வட்டாரத் தகவல்கள் மூலம் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சார்லோட் கொழும்பில் உள்ள வெலிக்கட சிறைக்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
