பாகிஸ்தானில் பிரித்தானிய இளம் பெண் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! வெளிவரும் பகீர் தகவல்கள்

Murder United Kingdom Pakistan Maya British Women Shot Dead
By Ragavan May 04, 2021 09:00 AM GMT
Report

பாகிஸ்தானில் வாடகை வீட்டில் வசித்து வந்த பிரித்தானிய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயா என மட்டுமே அடையாளம் காணப்பட்ட 26 வயது பெண், இங்கிலாந்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் கராச்சியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை அவர் தனது வீட்டில் தலையில் சுடப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

மாயாவின் தோழி ஒருவர் அதே வீட்டின் மேல் பகுதியில் ஒரு அறையில் வசித்து வருவதாகவும், அவர் இந்த கொலை சம்பந்தமான விசாரணையில் பொலிஸாருக்கு உதவுவதாகவும் கராச்சி காவல்துறை கண்காணிப்பாளர் சையத் அலி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பிரித்தானிய இளம் பெண் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! வெளிவரும் பகீர் தகவல்கள் | British Woman Murdered Gunman Rented Home Pakistan

மாயாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மற்றும் தடயவியல் வல்லுநர்கள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து சோதனை செய்துவருகின்றனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த மாயாவின் உடல் அருகே ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வீட்டின் அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண்ணின் பெற்றோர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பிற குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக கராச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பிரித்தானிய இளம் பெண் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! வெளிவரும் பகீர் தகவல்கள் | British Woman Murdered Gunman Rented Home Pakistan

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களைத் தேடுவதாக கராச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அடையாளம் அறியப்படாத 2 பேர் மாயாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டதாகவும், ஆனால் மாயா இருவரையுமே நிராகரித்து வந்தததாகவும், இதற்கிடையில் நடந்த பிரச்சினையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US