கோவாவில் மசாஜ் என்ற பெயரில் பிரித்தானிய பெண்ணுக்கு காதலன் கண்முன் நடந்த பயங்கரம்!
கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே, மசாஜ் செய்வதாக கூறி பிரித்தானிய இளம்பெண் ஒருவர் தன காதலன் கண் முன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட, உள்ளூர்வாசி வின்சென்ட் டிசோசா (32), சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே சட்டவிரோதமாக மசாஜ் சேவைகளை வழங்கிய குழுவின் ஒரு உறுப்பினராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த காலத்தில் பள்ளி நூலகராகவும் பணிபுரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரை பெர்னெம் பொலிஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவா சுற்றுலா சென்றுள்ள பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் அளித்த புகாரின்படி, கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்வீட் வாட்டர் ஏரியின் அருகே அவரது காதலனுடன் படுத்திருந்தபோது, மசாஜ் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஜூன் 2-ஆம் திகதி நடந்ததாகக் கூறப்பட்டது, ஆனால் அந்த பெண் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவியை நாடிய பின்னர் திங்களன்று பெர்னெம் (Pernem) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள், இன்ஸ்பெக்டர் விக்ரம் நாயக் தலைமையிலான பெர்னெம் பொலிஸார், நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
குற்றம் சட்டப்பட்டவரின் கடந்தகால பதிவுகளைப் பெற சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, தற்போது, அவர் நூலகராகப் பணியாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் இருவரும் பனாஜிக்கு அருகிலுள்ள மபுசா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அவரை காவலில் வைக்க பொலிஸார் திங்களன்று உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவார்கள் என்று அதிகாரிகல் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை துணை பொலிஸ் சூப்பிரண்டு (பெர்னெம்) சித்தாந்த் ஷிரோத்கர் மேற்பார்வையிட்டு வருகிறார்.