வெளியே போங்கள்... புலம்பெயர்வோருக்கு ஆதரவாக பிரதமரை நோக்கி சத்தமிட்ட பிரித்தானிய பெண்
நிகழ்ச்சி ஒன்றிற்காக இங்கிலாந்திலுள்ள எசெக்ஸுக்கு வருகை புரிந்த பிரித்தானிய பிரதமரும், உள்துறைச்செயலரும், எதிர்பாராதவிதமாக அசௌகர்யமான சம்பவம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தது.
இங்கிருந்து போங்கள் என சத்தமிட்ட பெண்
இங்கிலாந்திலுள்ள Essex town centre என்ற இடத்துக்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, பிரித்தானிய பிரதமர் ரிஷியும், உள்துறைச்செயலர் சுவெல்லா பிரேவர்மேனும் வந்திருந்தார்கள்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, பிரித்தானிய பெண் ஒருவர் அவர்களை நோக்கி சத்தமிடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
Heckler to Rishi Sunak and Suella Braverman,
— Farrukh (@implausibleblog) March 27, 2023
“Allow migrants into this country. Go away, we don’t want you here.” pic.twitter.com/hQBKTmSfDG
புலம்பெயர்வோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பெண்
அந்த பெண், 'புலம்பெயர்வோரை நம் நாட்டுக்குள் அனுமதியுங்கள், நீங்கள் இங்கிருந்து போங்கள், நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை' என சத்தமிட்டார்.
பிரதமருடன் வந்த பொலிசார் அதைக் கேட்டு திடுக்கிட்டாலும், பிரதமரோ, உள்துறைச் செயலரோ, எதையும் கவனிக்காததுபோல நடையைக் கட்டினார்கள்.
ஆனாலும், அந்தப் பெண் அமைதியாகவில்லை. தொடர்ந்து அவர் புலம்பெயர்வோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், பிரித்தானிய பத்திரிகைகள் பல, இந்த விடயத்தைக் குறித்து செய்திகளில் குறிப்பிடவே இல்லை. மாறாக, ரிஷியும் சுவெல்லாவும் கலந்துகொண்ட நிகழ்ச்சியைக் குறித்து மட்டுமே அவை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.