போர்ச்சுக்கல் விடுதியில் பிரித்தானிய பெண்ணுக்கு கத்திக்குத்து: 34 வயது மற்றொரு பிரிட்டிஷ் நபர் கைது
British Woman Stabbed to Death at Portugal: போர்ச்சுக்கல் விடுதியில் பிரித்தானிய பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பெண்ணுக்கு கத்திக்குத்து
போர்ச்சுக்கலின் அல்பூஃபிரா நகரின் அல்பாகர் ஆல்டோ டா கொலி(Alfagar Alto Da Colina) என்ற ஆடம்பர விடுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 34 வயது பிரித்தானிய பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாலை 6.42 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவி குழுவினர் சுயநினைவு இன்றி கிடந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் செய்தனர்
இருப்பினும் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும், சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டார்.

கைது மற்றும் விசாரணை
இந்த சம்பவத்தில் பிரித்தானியாவை சேர்ந்த மற்றொரு 34 வயது நபரை உள்ளூர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவருடன் இருந்த குழந்தை தற்போது உள்ளூர் அதிகாரிகளால் தற்காலிக பாதுகாப்பு பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த துயர சம்பவத்திற்கான பின்னணி காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |