மின்கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து பிரித்தானிய பெண்மணி செய்த செயல்: நிகழ்ந்த துயரம்
பிரித்தானியப் பெண் ஒருவர், மின்கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து, வீட்டை வெப்பப்படுத்தாமலே இருந்திருக்கிறார். விளைவு?
கெஞ்சிய குடும்பத்தார்
இங்கிலாந்திலுள்ள Bury என்ற இடத்தில் வாழ்ந்துவந்த பார்பரா (Barbara Bolton, 87) என்ற பெண்மணி, மின்கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து, வீட்டை வெப்பப்படுத்தாமலே இருந்திருக்கிறார்.
இப்படி இருக்காதீர்கள், வீட்டை வெப்பமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, ஹீட்டர்களை வாங்கிகொடுத்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.
ஆனால், தன் தாய் பழங்காலத்துப் பெண் என்று கூறும் பார்பராவின் மகனான மார்க் (Mark Bolton), தாங்கள் அவரைப் பார்க்கவந்தால் மட்டும் அந்த ஹீட்டர்களை இயங்கச் செய்யும் தன் தாய், அவர்கள் போனபிறகு அவற்றை அணைத்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
துயர முடிவு
2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பாட்டியைக் காண வந்த பார்பராவின் பேரன், பாட்டி சமையலறையில் பேச்சுமூச்சில்லாமல் விழுந்துகிடப்பதைக் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்போது, பார்பரா தனது 82ஆவது வயது வரை மருந்தகம் ஒன்றில் பணியாற்றியதைக் கேட்ட விசாரணை அதிகாரி, பார்பராவை வியந்து பாராட்டியுள்ளார்.
news sky