ஐரோப்பிய தீவு ஒன்றில் பிரித்தானிய இளம்பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்
ஸ்பெயினின் இபிஸா தீவில் பிரித்தானிய இளம்பெண்கள் இருவர் விபத்தில் சிக்கியதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய பெண்கள்
பிரித்தானியாவைச் சேர்ந்த 26, 27 வயது பெண்கள் இருவர் ஸ்பெயினின் இபிஸா (Ibiza) தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். கான் கில்லெமோ என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எலும்பு முறிவுகள்
குறித்த பெண்கள் இருவருக்கும் மூளையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால், அவர்களது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் 24 வயது நபர் ஒருவர் இயக்கிய வாகனத்தால் அப்பெண்கள் விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.
குறித்த நபருக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |