சுற்றுலா சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்: நடந்தது என்ன?
பிரித்தானிய இளைஞர் மால்டாவில் தனது ஹொட்டல் பால்கனியில் இருந்து விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
பால்கனியில் இருந்து விழுந்து
வடக்கு வேல்ஸின் பாங்கூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கெய்ரன் தாமஸ்.
இவர் சுற்றுலாவிற்காக மால்டாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு பிரபலமான சுற்றுலா நகரமான செயிண்ட் ஜூலியன்ஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கெய்ரன் தனது ஹொட்டல் பால்கனியில் இருந்து விழுந்து இறந்துள்ளார். அவரது அடையாளம் காணப்பட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரற்ற நிலையில்
அதிகாலை 4.15 மணியளவில் விரைந்த மருத்துவக் குழு, கட்டிடத்திற்கு வெளியே தரையில் உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்த கெய்ரன் மீட்கப்பட்டார்.
மால்டா காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "மால்டாவில் ஒரு பிரித்தானிய நபரின் மரணம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |