பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளைஞர்: மாயமானதை கவனிக்காமல் விட்டதால் தவிக்கும் தாய்
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற ஒரு பிரித்தானிய இளைஞர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டிருந்த நிலையில், அவர் மாயமானது தெரியாமலே திரும்பியிருக்கிறார்கள் அந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள்.
மேற்கு யார்க்ஷையரைச் சேர்ந்த Harry Sykes (16) என்னும் இளைஞர், தான் இணந்திருந்த ரக்பி விளையாட்டுக் குழுவினருடன் பிரான்சுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நடந்தது 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி.
Lee மற்றும் Gareth Greenwood என்னும் சகோதரர்கள் அந்த சுற்றுலாவை ஒழுங்கு செய்துள்ளார்கள்.
பிரான்சிலுள்ள Cayavere ஏரிக்குச் சென்ற Harryயும் அவரது சக ரக்பி குழுவினரும் அங்கு தண்ணீரில் விளையாடியிருக்கிறார்கள்.
பிறகு ஒரு ’குரூப் போட்டோ’ எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் Harry இல்லை. ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை.
இரவு 8.30 மணிக்குதான், Harryயைக் காணவில்லை என்பதையே கவனித்திருக்கிறார்கள் அவரது குழுவினர்.
பின்னர் Harryயின் உயிரற்ற உடல்தான் ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அலுவலர் ஒருவர் மேற்கொண்ட விசாரணையில், அந்த ’குரூப் போட்டோ’வில் Harry இல்லை என்பதைக் கூட யாரும் கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். Harryயின் பை மற்றும் டவல் ஆகியவை ஏரிக்கரையில் இருந்தும், யாரும் அவரைத் தேடியதாக தெரியவில்லை.
சுற்றுலாவை ஒழுங்கு செய்தவர்கள் தன் மகன் காணாமல் போனதைக் கூட கவனிக்காமல் விட்டதால் கோபமடைந்துள்ள Harryயின் தாயான Natasha Burton, தன் மகன் மாயமானதற்கு அவர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
தண்ணீரில் விளையாடும்போது Harryக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.