பல மாதங்கள் கோமாவில்... இரு முறை கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் பரவிய கதை தெரியாத பிரித்தானிய இளைஞர்
பிரித்தானிய இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி நீண்ட 11 மாதங்கள் கோமாவில் இருந்த நிலையில், தற்போது கொரோனா தொடர்பில் எதுவும் தெரியாமல் அவர் கண் விழித்துள்ளார்.
பிரித்தானியாவின் பர்டன், ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் மார்ச் 1 ம் திகதி வாகன விபத்தில் சிக்கியுள்ளார் 19 வயதேயான ஜோசப் ஃபிளாவில்.
பலத்த காயமடைந்த ஜோசப் ஃபிளாவில் அந்த விபத்து காரணமாக கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், சுமார் மூன்று வாரங்கள் கடந்து, மார்ச் 23 அன்று பிரித்தானியாவில் முதல் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது.
மாணவர் ஜோசப் ஃபிளாவில் மருத்துவமனையில் கோமாவில் இருந்த இந்த 11 மாத காலம், இருமுறை அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்தும் அவர் குணமடைந்துள்ளதுடன், தற்போது கோமாவில் இருந்தும் மீண்டுள்ளார்.
ஆனால் உலகமெங்கும் பல மில்லியன் மக்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளதும், பாதிக்கப்பட்டுள்ளதும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஜோசப்பை சந்திக்க அவரது தாயாரை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்பில் அவருக்கு எப்படி விளக்குவது என்பதில் உறவினர்கள் குழம்பிப்போயுள்ளனராம்.
மருத்துவர்களின் கடும் முயற்சியால் தற்போது ஜோசப் ஃபிளாவில் குணமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள உறவினர்கள்,
கடுமையான இந்த கொரோனா காலத்திலும் அவரை இதுவரை பராமரித்து வந்த செவிலியர்களுக்கே உண்மையில் நன்றி கூற வேண்டும் என்கின்றனர்.

