பாரிய கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்ட பிரித்தானிய இளைஞர்: அமெரிக்காவில் 47 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் 9 மில்லியன் பவுண்டுகள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, 22 வயது பிரித்தானிய இளைஞர் 47 ஆண்டுகள் சிறைதண்டனையை எதிர்கொள்கிறார்.
ஹேக்கிங்
ஸ்கொட்லாந்தின் Dundeeயைச் சேர்ந்த 22 வயது இளைஞர் Tyler Buchanan. ஹேக்கிங் குழுவின் ஒரு பகுதியாக செயல்பட்ட இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட நிதி தகவலை அணுகி, அதிநவீன மோசடியை இவர் நான்கு பேருடன் சேர்ந்து நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் செல்போன் எண்களுக்கு Phishing குறுஞ்செய்திகளை அனுப்பி, அவர்களின் கணக்குகள் செயலிழக்கக்கூடும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கிரிப்டோகரன்சி கணக்குகளை அணுகவும், 9 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மெய்நிகர் கரன்சியை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
இதனைத் தொடர்ந்து Tyler Buchanan அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் காத்திருக்கும் காவலில் உள்ளார்.
FBI, ஸ்கொட்லாந்து பொலிஸ் மற்றும் கலிபோர்னியா மத்திய மாகாணத்திற்கான அமெரிக்க அட்டர்னி அலுவலகம், சம்பந்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.
அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் மோசடிக்கு இலக்கானவர்கள் பணியாற்றியதாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு குறித்து அமெரிக்க வழக்கறிஞர் மார்ட்டின் எஸ்ட்ராடா கூறுகையில், "இந்த வகையான மோசடிக் கோரிக்கைகள் எங்கும் பரவி, பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை ஒரு மௌசால் கிளிக் செய்வதன் மூலம் கொள்ளையடிக்கின்றன" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |