தடுப்பூசி போட பிரித்தானியர்கள் செய்யும் திருட்டுத்தனம்! கவலையில் அரசாங்கம்: வெளிச்சத்திற்கு வந்த உண்மை
பிரத்தானியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் செய்யும் திருட்டுத்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானியாிவல் நீங்கள் முன்னணி சுகாதார அல்லது சமூக பராமரிப்பு ஊழியர்களாக இருந்தால் வயது வரம்பின்றி 119 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் அழைத்து அல்லது அதிகாரப்பூர்வமான NHS கொரோனா தடுப்பூசிக்கான இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
ஆனால், தடுப்பூசி மையத்தில் நீங்கள் முன்னணி சுகாதார அல்லது சமூக பராமரிப்பு ஊழியர் என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் போது தாங்கள் முன்னணி சுகாதார ஊழியர் அல்லது சமூக பராமரிப்பு ஊழியர்கள் என பலர் பொய்யாகக் கூறுவதாக பல தடுப்பூசி மையங்கள் கூறியுள்ளன.
ஒரு வாரத்திற்கு கிட்டதட்ட 12-க்கும் மேற்பட்டோரை தங்கள் தகுதி குறித்து பொய் சொன்னதாக கண்டறிந்து தடுப்பூசி மையத்திலிருந்து திருப்பி அனுப்பி வருவதாக லண்டன் மருந்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி சுகாதார அல்லது சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த முன்னுரிமையை மக்கள் தவறாக பயன்படுத்துவதால் பிரித்தானியா அரசாங்கம் கவலையடைந்துள்ளது.