அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த வாகன தாக்குதலில் பிரித்தானியர் ஒருவரும் பலி
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது, ஒருவர் தனது ட்ரக்கைக்கொண்டு வேண்டுமென்றே மக்கள் மீது கண்மூடித்தனமாக மோதியதில் குறைந்தது 14 பேர் வரை உயிரிழந்த விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரித்தானியக் குடிமகன் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியர் ஒருவரும் பலி
உயிரிழந்த பிரித்தானியரின் பெயர் எட்வர்ட் (Edward Pettifer, 31) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எட்வர்ட், இங்கிலாந்திலுள்ள Chelsea என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
14 பேர் வரை உயிரிழந்து, சுமார் 39 பேர் வரை காயமடையவும் காரணமாக இருந்த இந்த பயங்கரத்தை அரங்கேற்றியவர் ஷம்சுதின் (Shamsud-Din Jabbar, 42) என்பவர் ஆவார்.
பொலிசார் மீதும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்த, பொலிசார் திருப்பிச் சுட்டதில் ஷம்சுதினும் கொல்லப்பட்டுவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |