நேபாளப் பெருவெள்ளம்... மாயமான பிரித்தானியரின் பெற்றோர்: சீனாவிடம் கோரிக்கை
Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித்தானியர் ஒருவர் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,400க்கு மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள், அவர்களுடைய நிலை தெரியவில்லை!
மாயமான பிரித்தானியரின் பெற்றோர்
அப்படி மாயமானவர்களில் 33 பிரித்தானியர்களும் அடங்குவர். இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான ஆனந்த் பட்டேல் என்பவர், நேபாள பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற தன் பெற்றோரான பிபின் பட்டேல் மற்றும் மாலா பட்டேல் ஆகியோர், பெருவெள்ளம் தாக்கும் முன்பே நேபாள சீன எல்லையைக் கடந்து திபெத்துக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்பது, எல்லை ஆவணங்களின்படி தெரியவந்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் கோரிக்கை
ஆகவே, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவுமாறு சீன அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த்.
தன் பெற்றோரைக் காணவில்லை என்னும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களுடைய நிலைமை என்ன என்பது தெரியாத விடயம், மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மற்றும் ஒரு பிரித்தானியக் குடிமகனான சுனில் அமின் என்பவர், தன் மனைவியாகிய ஹேமா அமினும் அவரது சகோதரியும் நேபாள பெருவெள்ளத்தின்போது காணாமல் போய்விட்டதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |