தாய்லாந்தில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்த பிரித்தானியர்! விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்
தாய்லாந்தில் பிரித்தானியர் ஒருவர் வெட்டு காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanchanaburi மாகாணத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Kanchanaburi மாகாண பொலிஸ் அளித்த தகவலில், 49 வயதான பிரித்தானியர் அவரது வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
வெட்டு காயங்களுடன் உயிருடன் கிடந்த மற்றொரு 55 வயதான பிரித்தானியர் தற்போது மருத்துவமனையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தாய்லாந்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
இரண்டு பிரித்தானியர்களும் மதுஅருந்திவிட்டு சத்தம் அதிகமாக வைத்து இசை கேட்தற்காக, தாய்லாந்தை சேர்ந்த சந்தேக நபர் இருவரையும் அரிவாளால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்து வருகின்றனர் என உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        