கனவு நனவானது... லொட்டரியில் 108 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர்!
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் 108 பவுண்டுகள் பரிசு விழுந்தது.
ஆனால், வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது போர் அடிக்கிறது என்கிறார் அவர்.
பிரித்தானியாவிலுள்ள Coulsdon என்ற இடத்தைச் சேர்ந்த Neil Trotter என்னும் மெக்கானிக்குக்கு, லொட்டரியில் 107.9 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
அவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும், விலை உயர்ந்த கார் ஒன்றையும் 400 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பங்களா ஒன்றையும் வாங்கினார் Trotter.
image -thesun
ஆனால், இப்போது இந்த ஆடம்பர வாழ்வு போர் அடிக்கிறது என்கிறார் அவர்.
ஒரு நாள் நான் ஒரு கோடீஸ்வரனாவேன் என்பது எனக்குத் தெரியும், எப்படியும் எனக்கு லொட்டரியில் பரிசு விழும் என்று 2019ஆம் ஆண்டே கூறியிருந்த Trotter, அப்போதே தன் தந்தையிடம், நான் எனக்கென்று சொந்தமாக ஏரி ஒன்று இருக்கும் வீடு ஒன்றை வாங்குவேன் என்று கூறுவாராம்.
அவரது தந்தையோ, அதெல்லாம் கனவில்தான் நடக்கும் மகனே என்பாராம். ஆனால், இப்போது லொட்டரியில் 107.9 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்ததும், உண்மையாகவே தனக்கென்று சொந்தமாக ஏரி ஒன்று இருக்கும் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கிவிட்டார் Trotter!
image -thesun