லொட்டரியில் 500 கோடி ரூபாய் வென்ற பிரித்தானியர்: கார் ஓட்டும் காரணம்
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 500 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? ஆடம்பரமாக தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள் அல்லவா?
ஆனால், இந்த நபரோ கார் ஓட்டுகிறார்!
லொட்டரியில் 500 கோடி ரூபாய் வென்ற பிரித்தானியர்
இங்கிலாந்தின் Cornwallஇலிலுள்ள Truro என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார் பீற்றர் (Peter Congdon, 76).
பீற்றருக்கு 10 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். பீற்றருக்கு லொட்டரியில் 13.5 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. இலங்கை மதிப்பில் 5,39,43,35,152.95 ரூபாய்.
Image: Martin Bennett/National Lottery
கார் ஓட்டும் காரணம்
ஒரு பிரித்தானிய இளம்பெண்ணின் திருமணம் கோவிட் காலகட்டம் காரணமாக நான்கு முறை தள்ளிப்போன நிலையில், சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆனால், அவரது திருமணத்துக்கு வரவேண்டிய கார் நேரத்துக்கு வரவில்லை. மேக் அப் கலையும் அளவுக்கு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த அந்த மணப்பெண்ணை தனது காரில் ஏற்றிச் சென்று தேவாலயத்தில் விட்டிருக்கிறார் கோடீஸ்வரரான பீற்றர்.
அந்தப் பெண் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்போன பீற்றர், அதற்குப் பின் சுமார் 25 மணப்பெண்களை தன் காரில் ஏற்றிச் சென்று தேவாலயத்தில் விட்டிருக்கிறார்.
Image: PA
எல்லாம் பீற்றருக்கு லொட்டரியில் பரிசு கிடைத்து அவர் ஒரு BMW கார் வாங்கிய பிறகுதான்.
மரணத்தருவாயிலிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு, ஒரு நாளாவது ஒரு இளவரசி போல வாழ ஆசையாம். அதை அறிந்துகொண்ட பீற்றர், இளவரசி போல அலங்காரம் செய்துகொண்ட அந்த இளம்பெண்ணின் ஆசைக்காக, அவரை தன் காரில் ஏற்றிக்கொண்டு வலம் வந்துள்ளார்.
மற்றொரு பெண்ணுக்கு காரில் பயணிக்க பீற்றர் உதவ, அந்தப் பெண், பீற்றரின் காரில் ஏறியதும் ஏங்கி ஏங்கி அழுதாராம். அவருக்கு BMW காரில் செல்ல கொள்ளை கொள்ளை ஆசை, ஆனால், வசதியில்லை. ஆக, பீற்றர் அந்தப் பெண்ணின் ஆசையைத் தீர்த்துவைத்திருக்கிறார்.
Image: Martin Bennett/National Lottery
தன் சகோதரனின் இறுதிச் சடங்குக்கு செல்ல வசதியில்லாத ஒர் பெண்ணை தன் காரில் ஏற்றிச்சென்று அவர் செல்லவேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளார் பீற்றர். இப்படி பலருக்கும் தொடர்ந்து தன் கார் மூலம் உதவிவருகிறார் பீற்றர்.
இதற்கெல்லாம் அவர் கட்டணம் வாங்குவதில்லை. கோட் சூட் அணிந்துகொண்டு கம்பீரமாக அவர் கார் ஓட்டிவர, BMW காரில் அவர்கள் விசேட நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்குச் சென்று இறங்கும்போது அவர்கள் முகத்தில் காணும் அந்த மகிழ்ச்சி மட்டும் தனக்குப் போதும் என்கிறார் பீற்றர்.
Image: SWNS.com
அது மட்டுமல்ல, இளைஞர்கள், குறிப்பாக புதிதாக திருமணமாகி வாடகை வீட்டுக்கு குடிவரும் தம்பதியருக்காக, குறைந்த வாடகையில் வீடுகள் வாடகைக்கு விடுகிறார் பீற்றர்.
அந்தப் பிள்ளைகள் பணம் சேர்த்து தங்களுக்கென்று வீடு வாங்கிகொள்ள அது உதவியாக இருக்கும் என்கிறார் பீற்றர்.
பீற்றரின் மனைவியான ரோஸ்மேரி 30 ஆண்டுகளுக்கு முன் அரியவகை நோய் ஒன்றினால் உயிரிழந்துவிட்டார்.
மனைவியின் நினைவாக தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கியும் வருகிறார் பீற்றர். இந்தக் காலத்தில் இப்படி ஒரு நபரா?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |