இந்த ஒரு பழக்கத்தை விட்டாலே போதும்: பிரித்தானியர்கள் மரணத்தை பெருமளவில் தவிர்க்கலாம்...
பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு சுமார் 78,000 பேர் புகைபிடித்தல் காரணமாக உயிரிழக்கிறார்கள்.
15 வகை புற்றுநோய்களுக்கு புகைப்பிடித்தல் காரணமாக உள்ளது.
ஆண்டுதோறும் பிரித்தானியாவில் சுமார் 78,000 பேர் புகைபிடித்தல் காரணமாக உயிரிழக்கிறார்கள்.
சமீபத்திய ஆய்வு ஒன்று, புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டாலே, பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பில் 61 சதவிகிதத்தைத் தவிர்க்கலாம் என்கிறது.
நுரையீரல், தொண்டை, வாய், சிறுநீர்ப்பை, கல்லீரல், சிறுநீரகம், வயிறு, கர்ப்பவாய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் முதலான 15 வகை புற்றுநோய்களுக்கு, புகைப்பிடித்தல் காரணமாக உள்ளது.
ஆக, ஒருவருமே புகைப்பிடிக்கவில்லை என்றால், புகைப்பிடித்தல் தொடர்பான புற்றுநோய்களில் 61 சதவிகிதத்தைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Credit: Getty - Contributor