வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த பிரித்தானியர்களுக்கு அபராதம்

By Balamanuvelan Jul 15, 2024 05:45 AM GMT
Report

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஒரு தம்பதியர், தங்கள் வீட்டின் முன்னால் குவிந்துகிடந்த குப்பையை சுத்தம் செய்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ளார்கள்.

வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த தம்பதி

இங்கிலாந்திலுள்ள Stoke-on-Trent என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார்கள், Veronika Mike, Zoltan Pinter தம்பதியர்.

தங்கள் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள சாலையில் குப்பை குவிந்துகிடந்ததைக் கண்ட தம்பதியர், குப்பையை அகற்றியுள்ளார்கள்.

வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த பிரித்தானியர்களுக்கு அபராதம் | Britons Fined Clearing Rubbish In Front Of House

10 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு கவுன்சில் அதிகாரிகளிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த தம்பதியர், வீட்டு குப்பையை முறைப்படி அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் கோபம்

அத்துடன், தம்பதியருக்கு ஆளுக்கு 600 பவுண்டுகள் வீதம், மொத்தம் 1,200 பவுண்டுகள், அதாவது, இலங்கை மதிப்பில் 4,71,105 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள் அதிகாரிகள்.

நல்லது செய்ததற்காக தங்களுக்கு அபராதம் விதித்துள்ளதால் கோபமடைந்துள்ளார்கள் தம்பதியர். Zoltan உடனடியாக அபராதத்தை செலுத்திவிட, Veronika மாதம் 100 பவுண்டுகள் வீதம், ஆறு மாதங்களுக்கு தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்திவருகிறார்.

இந்த மோசமான அனுபவத்துக்குப் பிறகு, இனி குப்பை குவிந்து நாற்றமெடுத்தால் கூட, குப்பையைத் தொடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் தம்பதியர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US