பிரித்தானியர்கள் எப்போது பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்?
மார்ச் 12ஆம் திகதி முதல் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் உட்பட எட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளல்லாத நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வருவோர், பிரான்சுக்குள் நுழைய எந்த சிறப்புக் காரணமும் தெரிவிக்கவேண்டியதில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், இந்த எட்டு நாடுகளிலிருந்தும் வருவோர் பிரான்சுக்குள் தடையின்றி நுழையலாம்.
அவர்களுடைய நாடு அவர்களை பிரான்ஸ் செல்ல அனுமதிக்கிறதா மற்றும் அவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்துள்ளார்களா என்பது போன்ற விதிகளுக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்படவேண்டும்.
இம்மாதம் (மே மாதம்) 17ஆம் திகதி பிரித்தானியா சர்வதேச பயணத்தை துவங்கும் என
எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நாள் முதல் பிரித்தானியர்கள்
விடுமுறைக்காகவோ பிரான்சிலிருக்கும் அவர்களது இரண்டாவது வீடுகளை பார்க்கவோ
தாராளமாக வரலாம்.