இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் எச்சரிக்கை
சுற்றுலா அல்லது ஓய்வு நேரங்களுக்காக மஞ்சள் நிற (amber) பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச பயணங்கள் குறித்து அமைச்சர்களிடமிருந்து முரணான தகவல்கள் வெளியானதை அடுத்து பிரதமர் அதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மே 17ம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாவுக்கான தடையை பிரித்தானியா அரசு நீக்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் பிரான்ஸ், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்க என மஞ்சள் நிற பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியர்கள் சில முக்கியமான குடும்பம் விஷயங்கள் அல்லது அவசர வணிக காரணத்திற்காக மட்டும் மஞ்சள் நிற (amber) பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
மஞ்சள் நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்புவர்க்ள கட்டாயமாக சுயமாக தனிமைப்படுத்த வேண்டும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், தங்கள் முகவரி விவர படிவம் உட்பட மற்ற எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மஞ்சள் நிற (amber) பட்டியலில் உள்ள நாடு என்ன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ளவது மிகவும் முக்கியம்.
மக்கள் சுற்றுலாவுக்கு செல்ல கூடிய இடமாக மஞ்சள் நிற (amber) பட்டியலில் உள்ள நாடுகளில் நிலைமை இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பச்சை பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மக்கள் புறப்படுவதற்கு முன்னும் பின்னும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து திரும்பும் மக்கள், பிரித்தானியா திரும்பியவுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும், அதே போல் தொடர்ச்சியான கொரோனா பரிசோதனைகளை எடுக்க வேண்டும், விலாச விவர படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து திரும்பும் பிரித்தானியா குடிமக்கள், 1,750 பவுண்ட் செலவில் 10 நாட்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.