கடனை அடைக்க சுவிட்சர்லாந்தில் திருடிய பிரித்தானியர்கள் இவர்கள்தான்: தண்டனை நிறைவேற்றம்
பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
தற்போது அவர்களுடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்
பிரித்தானிய சகோதரர்களான Stewart மற்றும் Louis Ahearne, 2019ஆம் ஆண்டு, மற்றொரு நபருடன் சேர்ந்து, ஜெனீவாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளையடித்துள்ளார்கள்.
Composite: Metropolitan Police/PA Wire
கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணம்
சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய சகோதரர்கள், நீதிமன்ற விசாரணையின்போது, தங்களுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவே, தாங்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
சகோதரர்களில் மூத்தவரான Stewart Ahearne (45) கூறும்போது, தன் தம்பியாகிய Louis Ahearne (34) கடனில் சிக்கியிருப்பதாகவும், அவரைத் தப்புவிக்க, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பொருளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்றும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒருவர் கூறியதாகவும், தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என உள்ளுணர்வு கூற, தான் அந்த கொள்ளையில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கிறார்.
புகைப்படங்கள் வெளியாகின
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த சகோதரர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Stewart மற்றும் Louis Ahearne என்னும் அந்த சகோதரர்கள் தெற்கு லண்டனிலுள்ள கிரீன்விச் என்னும் இடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த கலைப்பொருட்களின் மதிப்பு, சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
சிக்கியது எப்படி?
இந்த திருட்டு தொடர்பாக சுவிஸ் மற்றும் பிரித்தானிய பொலிசார் இணைந்து விசாரணையில் இறங்கினார்கள். சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பொருட்களுடன் லண்டன் திரும்பிய சகோதரர்களைப் பிடிப்பதற்காக, கலைப்பொருட்கள் வாங்குபவர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்ட ரகசிய பொலிசாரிடம், அவர்கள் பொலிசார் எனத் தெரியாமல், சகோதரர்களில் ஒருவரான Stewartம் அவரது கூட்டாளியான Mbaki Nkhwa என்பவரும் அரிய கலைப்பொருளான ஜாடி ஒன்றை 450,000 பவுண்டுகளுக்கு விற்றார்கள்.
இப்படித்தான் சகோதரர்கள் சிக்கினார்கள். லண்டனில் சிக்கிய சகோதரர்களை பிரித்தானிய பொலிசார், சுவிஸ் பொலிசாரிடம் ஒப்படைக்க, அவர்களுக்கு மூன்றரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் சுவிட்சர்லாந்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்துக்குள் நுழையவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |