வன்முறை வெடித்துள்ள வெளிநாடொன்றில் சிக்கிக்கொண்ட பிரித்தானியர்கள்: பிரான்ஸ் செய்துள்ள உதவி
வன்முறை வெடித்துள்ள நைஜர் நாட்டில் சிக்கிக்கொண்ட பிரித்தானியர்களை அங்கிருந்து வெளியேற்ற பிரான்ஸ் உதவியுள்ளது.
எச்சரித்த பிரித்தானியா
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து நைஜர் நாட்டில் வன்முறை வெடித்தது. ஆகவே, அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற பிரான்ஸ் முதலான நாடுகள் நடவடிக்கைகளில் இறங்கின.
GETTY IMAGES
ஆனால், பிரித்தானியா, தன் குடிமக்களை, தாங்கள் இருக்கும் இடம் முதலான விவரங்களை பிரித்தானிய அரசிடம் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தியதுடன் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்க மட்டுமே செய்திருந்தது.
பிரான்ஸ் செய்த உதவி
இந்நிலையில், தன் குடிமக்களை நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்த பிரான்ஸ், தன் நாட்டு விமானத்திலேயே பிரித்தானியர்களையும் ஏற்றிக்கொண்டுள்ளது.
ஆக, நைஜர் நாட்டில் வாழ்ந்துவந்த பிரித்தானியர்களில் ஒரு குழுவினர், அங்கிருந்து பிரான்ஸ் உதவியால் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்கள்.
BBC
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிரித்தானியர்களை நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்ற உதவிய பிரான்சுக்கு பிரித்தானியா நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜர் நாட்டில், நூறுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பிரித்தானியர்கள் வாழ்ந்துவந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |