பிரித்தானியா குண்டு வீசிய இடங்களைக் காண ஜேர்மனிக்கு சுற்றுலா வரும் பிரித்தானியர்கள்: ஜேர்மானியர்கள் எதிர்ப்பு
போரின்போது பிரித்தானியா குண்டு வீசிய இடங்களைக் காண ஜேர்மனிக்கு சுற்றுலா வரும் பிரித்தானியர்களுக்கு ஜேர்மானியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளின் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்
1943ஆம் ஆண்டு, மே மாதம், ஜேர்மனி மீது பிரித்தானியா குண்டுமழை பொழிந்தது. மே 23 அன்று Dortmund நகரம் மீது 2,000 டன் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டன.
POOL
இந்த நிகழ்வின் 80 ஆவது ஆண்டு நிறைவை சமீபத்தில் பிரித்தானியா அநுசரித்தது. விடயம் என்னவென்றால், பிரித்தானியாவுக்கு அது வெற்றி, ஜேர்மனிக்கோ அடி. அந்த தாக்குதலில், 53 விமானிகள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.
இப்படியிருக்கும் நிலையில், தாங்கள் ஜேர்மனி மீது குண்டு வீசிய இடங்களைக் காண்பதற்காக பிரித்தானியர்கள் ஜேர்மனிக்கு சுற்றுலா வருகிறார்களாம்.
ஜேர்மானியர்கள் எதிர்ப்பு
ஒருபக்கம், தாக்குதலில் உயிரிழந்த தங்கள் மக்களுக்காக ஜேர்மானியர்கள் அந்த இடத்தில் துக்கம் அநுஷ்டிக்கும் நிலையில், அதே இடத்தில் பிரித்தானியர்கள் பீர் குடித்துக் கொண்டாடுவதைப் பார்க்க கஷ்டமாக உள்ளது என்கிறார் அந்த இடத்தில் வாழும் Elke Husemann என்பவர்.
MOD
1943ஆம் ஆண்டு, மே 16ஆம் திகதி பிரித்தானியா வீசிய குண்டுகள், the Mohne மற்றும் Eder என்னும் இரண்டு அணைகளை சேதப்படுத்த, போலந்து மற்றும் உக்ரைனிலிருந்து அடிமை வேலையாட்களாக வந்திருந்தவர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பிரித்தானியாவின் தாக்குதலின் நோக்கமும் அந்த அணைகளை சேதப்படுத்தி ஜேர்மனியின் தொழிற்சாலைகள் நிறைந்த Ruhr பள்ளத்தாக்கில் பெருவெள்ளம் ஏற்படச் செய்வதுதான்.
அந்த தாக்குதலில், ’bouncing bombs’ எனப்படும் சிறப்பு வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
MOD
ஆக, தங்கள் மக்கள் கொல்லப்பட்ட இடத்தைப் பார்க்க பிரித்தானியர்கள் சுற்றுலா வருவதை தடை செய்யவேண்டும் என அந்த பகுதியில் வாழும் ஜேர்மானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |