விடுமுறைக்காக பிரான்சுக்கு சென்ற பிரித்தானியர்கள்: 3,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டிய நிலை
விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரித்தானிய தம்பதியருக்கு, 3,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
விடுமுறைக்காக பிரான்ஸ் சென்ற பிரித்தானியர்கள்
இங்கிலாந்திலுள்ள Suffolk என்னுமிடத்தைச் சேர்ந்த ஜேன் (Jane Cave), பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக புராதான பொருட்கள் வாங்குபவர்.
ஜேனும் அவரது கணவரான எடும் (Ed Masters) புராதான பொருட்கள் வாங்குவதற்காக, வேன் ஒன்றில் பிரான்ஸ் சென்றுவிட்டு பிரித்தானியா திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
பிரான்ஸ் எல்லையில் கலாயிஸ் என்னுமிடத்தில் அதிகாரிகள் சோதனைக்குப் பிறகு பிரித்தானியாவுக்குள் வேன் நுழைந்த நிலையில், வேனுக்குள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்கவே, ஜேன் பொலிசாரை அழைக்க, வேனை நிறுத்தி என்ன என்று பார்த்திருக்கிறார் எட்.
அப்போது, வேனுக்குள்ளிருந்து ஒரு இளைஞர் இறங்கி ஓடி அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்தின் பின்னல சென்று மறைந்துள்ளார்.
அபராதம் செலுத்தவேண்டிய நிலை
பொலிசார் அந்த இளைஞரைக் கைது செய்ய, எடும் ஜேனும் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
ஆனால், எட் ஜேன் தம்பதியருக்கு எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், எட் ஜேன் தம்பதியர் புலம்பெயர்வோர் ஒருவரை தவறுதலாக நாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், அதற்காக 3,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கவே அதிர்ச்சியடைந்துள்ளார்கள் அவர்கள்.
யாரோ வேனுக்குள் மறைந்திருப்பதை அறிந்து பொலிசாரை அழைத்ததால் சரியான விடயத்தைச் செய்ததாக நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அது எங்களுக்கே பிரச்சினையாக அமையும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் எட்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |