மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள்
ரஷ்ய - உக்ரைன் போர் மும்முரமடைந்துவரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்னும் பயமும், கூடவே, புடின் அணுகுண்டு வீசலாம் என்னும் பயமும் உருவாகிவருகிறது.
Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியார்கள்
Image: Getty Images
Nottinghamshireil வாழும் மேத்யூ பிரைட் என்பவர், Bunker என்னும் பாதுகாப்புப் பேழைகளை உருவாக்குபவர் ஆவார்.
இந்நிலையில், அணுகுண்டு வீசப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்காக, பிரித்தானியர்கள் bunker வாங்க அலைமோதுவதாக தெரிவித்துள்ளார் மேத்யூ.
Image: Getty Images/iStockphoto
கடந்த வாரத்தில் மட்டும், அணு ஆயுதங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, தங்களுக்கு இந்த பாதுகாப்புப் பேழைகளை கட்டிக்கொடுக்குமாறு எக்கச்சக்கமான பிரித்தானியர்கள் தன் நிறுவனத்தை அணுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மேத்யூ.
Image: POOL/AFP via Getty Images
பூமிக்கடியில் பாதுகாப்பான முறையில் கட்டப்படும் இந்த பாதுகாப்புப் பேழைகளுக்காக 100,000 பவுண்டுகள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images
Image: Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |