செப்டம்பர் 30 ஆம் திகதி கடைசி நாள்... பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
2020 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பிருந்தே பிரான்சில் வாழும் முழு நேர வாழிட உரிமம் கொண்ட பிரித்தானியர்கள், 2021 அக்டோபர் 1 அன்று carte de séjour residency card ஒன்றை உரிமையாக்கிக்கொண்டிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அந்த காலக்கெடு, 2022 ஜனவரி 1ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த வாழிட உரிம அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கான திகதி இம்மாதம் 30 ஆம் திகதியாகும் (செப்டம்பர் 30).
ஆகவே, இதுவரை carte de séjour residency card கோரி விண்ணப்பிக்காதவர்கள் நாளை மறுநாள், அதாவது, வியாழக்கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு...https://www.thelocal.fr/20210928/brits-in-france-given-extension-to-deadline-for-post-brexit-residency-cards/