ஒரே மாதத்தில் 70 பேர் பலி: சுற்றுலா தொடர்பில் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 70 பேர் பலி
துருக்கி நாட்டில், புத்தாண்டு துவங்கியபின் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது.
ஜனவரி 14ஆம் திகதிக்குப் பிறகு மட்டும் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70.
மதுபானம் மற்றும் புகையிலை தயாரிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக துருக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல், மதுபானம் மற்றும் புகையிலை தயாரிப்புகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
ஆகவே, மக்கள் விலை குறைந்த மதுபானம் கிடைக்கும் இடத்தைத் தேடிச் செல்கிறார்கள்.
அதை பயன்படுத்திக்கொண்டு ஒருபக்கம் கள்ளச்சாராய தயாரிப்பில் சிலர் இறங்கியுள்ளார்கள்.
கள்ளச்சாராயத்தில், குறைவான விலையில் கிடைப்பதால் ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்பட, அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
ஆகவே, துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மதுபானம் அருந்தச் செல்வது குறித்து பிரித்தானிய அரசு அவர்களை எச்சரித்துள்ளது.
துருக்கியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், துருக்கிக்குச் செல்லும் பிரித்தானியர்கள் மதுபானம் விடயத்தின் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |