மூன்று நாட்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்துவைக்க பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
British people are being urged by the government to stockpile three days worth of food and water to survive a national emergency: தேசிய அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்காக, மூன்று நாட்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியர்களை சற்றே பதற்றமடையச் செய்யும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், தேசிய அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்காக, மூன்று நாட்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
சேமித்து வைக்கவேண்டிய விடயங்கள்
மூன்று நாட்களுக்கான தண்ணீர் என்பது, தோராயமாக, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 36 லிற்றர் தண்ணீர் ஆகும்.

மேலும், சீக்கிரம் கெட்டுப்போகாத டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மீன், காய்கறிகள், உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகள், பேட்டரியில் இயங்கும் டார்ச், போர்வைகள், முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பவர் பேங், ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்கள், முதலுதவி கிட், குழந்தைகளுக்கான பால் பவுடர், நேப்பிகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் ஆகிய விடயங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலர், திடீரென இது என்ன அறிவிப்பு என பதற்றமடைய, சமீபத்திய மோசமான வானிலை மற்றும் சைபர் தாக்குதல்களே இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரான டான் ஜார்விஸ் கூறும்போது, கடந்த குளிர்காலத்தில் அடித்த புயல்களும், இந்தக் கோடையில் ஏற்பட்ட காட்டுத்தீயும், மோசமான வானிலை நம் அன்றாட வாழ்வை எப்படி பாதித்து நாம் சார்ந்திருக்கும் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் மற்றும் இணையம் போன்ற விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நமக்கு தெளிவாக காட்டிவிட்டன என்கிறார்.

அதேபோல, பாதுகாப்புத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங்கும், நெருக்கடிகள் ஏற்படும் நிலையில் அவற்றை எதிர்கொள்ள நம் மக்கள் தயாராக இருக்கிறார்களா என கேள்வி எழுப்புவது அவசியம் என்கிறார்.
ஆக, மோசமான வானிலையோ, சைபர் தாக்குதல்களோ ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்ள, உணவு, தண்ணீர் மற்றும் அவசர தேவைகளுக்கான பொருட்களுடன் மக்கள் தயாராக இருக்கவேண்டும் என அமைச்சர்கள் மக்களை அறிவுறுத்திவருகிறார்கள்.

ஏற்கனவே ரஷ்யா பலவிதங்களில் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தலை உருவாக்கிவருகிறது.
குறிப்பாக, பிரித்தானிய கடல் பகுதியில் ரஷ்ய கப்பல்கள் நடமாடுவது தெரியவந்துள்ள நிலையில், இணையத்துக்கான கேபிள்கள், எண்ணெய், எரிவாயு கொன் டு செல்லும் குழாய்கள் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளநிலையில், அவற்றை ரஷ்யா சேதப்படுத்துமானால், அதனால், வங்கிகள், மருத்துவமனைகள் முதல் போக்குவரத்து, தகவல் தொடர்பு வரை கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.